ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சுவாதி கொலையில் திடீர் திருப்பம்… கொலையாளி ராம்குமார் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கைது.. ! – பரபரப்பு பின்னணி.!

Share this post:

kolai

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் என்ற பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் கைது செய்ய முயற்சி செய்தபோது அவர், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24 ஆம் தேதி காலை பொறியாளர் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சுவாதியை கொன்ற கொலையாளியைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

கொலைக்குப் பின்னர் சுவாதியின் செல்போனை எடுத்துச் சென்ற கொலையாளி இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் ஸ்விட்ச் ஆப் செய்ததால், கொலையாளி சூளைமேடு பகுதியில் தங்கி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

சிசிடிவி காட்சிகளை வைத்து சூளைமேடு பகுதியில் வீடு வீடாக சென்று குற்றவாளியின் புகைப்படத்தை காட்டி தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் செங்கோட்டைக்கு விரைந்தனர்.

இதையடுத்து நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள தேன் பொத்தை மீனாட்சி புரம் பகுதியை சார்ந்த பரமசிவன் மகன் ராம்குமார் என்பவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசார் ராம்குமாரை மடக்கி கைது செய்ய முயன்றபோது, அவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதையடுத்து நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள தேன் பொத்தை மீனாட்சி புரம் பகுதியை சார்ந்த பரமசிவன் மகன் ராம்குமார் என்பவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசார் ராம்குமாரை மடக்கி கைது செய்ய முயன்றபோது, அவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

பின்னர் கழுத்து அறுப்பட்ட நிலையில் அவரை கைது செய்த போலீசார் செங்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் நெல்லை கொண்டு வரப்பட்ட ராம்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ராம்குமார் நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரம் பைம்பொழி கிரமாத்தை சேர்ந்தவர். இவர் ஆலங்குளத்தில் உள்ள கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் வேலை தேடி சென்னை வந்ததாக கூறப்படுகிறது. சென்னை சூளைமேட்டில் 3 மாதங்கள் அவன் தங்கியிருந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட ராம்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஒருதலைக் காதலால் நிகழ்ந்த பயங்கரம்:
நெல்லையில் பிடிபட்டுள்ள ராம்குமார், மென்பொறியாளர் சுவாதியை ஒருதலையாக காதலித்ததாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை சூளையில் 3 மாதங்கள் அவன் தங்கியிருந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட ராம்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...