கடையில் வாங்கிய பவர் பேங்குகின் (Power Bank) உள்ளே மணல்? – அதிர்ச்சியில் உறைந்த நபர்..!

Share this post:

power

புறக்கோட்டை கடைகளில் விற்பனை செய்யப்படும் பவர் பேங்குகள் மிகவும் தரம் குறைந்தவை எனத் தெரிவிக்கப்படுகிறது.

புறக்கோட்டை கடையொன்றில் பவர் பேங் ஒன்றை கொள்வனவு செய்த வாடிக்கையாளர் ஒருவரின் முகநூல் பக்கத்தில் இந்த விடயம் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

செல்லிடப் பேசிகளை சார்ஜ் செய்வதற்காக இந்த பவர் பேங்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

இன்றைய தலைமுறையினர் பலர் ஸ்மார்ட் செல்லிடப் பேசிகளை அதிகளவு பயன்படுத்துவதனால், அதன் பற்றறிகள் நீண்ட நேரத்திற்கு தாக்குப் பிடிப்பதில்லை.

அதனால், துரித கதியில் எந்த இடத்திலும் பற்றறிகளை சார்ஜ் செய்து கொள்ள இந்த வகை பவர் பேங்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

அவ்வாறான பவர் பேங்குகள் புறக்கோட்டையின் அநேக தொலைபேசி விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

சந்தைப் பெறுமதியை விடவும் குறைந்த விலையில் தொலைபேசி உதிரிப் பாகங்கள் உள்ளிட்டன விற்பனை செய்யப்படுகின்றன.

10400 கொள்ளளவு உடைய பவர் பேங் ஒன்றை 800 ரூபாவிற்கு தாம் கௌ;வனவு செய்தாகவும், அது உரிய முறையில் பயன் தராத காரணத்தினால் அதனை கழற்றிய போது பவர் பேங் பற்றறிகளில் மணல் நிரப்பப்பட்டிருந்ததனை காண முடிந்தது எனவும் குறித்த வாடிக்கையாளர் முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த பவர் பேங் புறக்கோட்டையில் எந்த விற்பனை நிலையத்தில் கொள்வனவு செய்யப்பட்டது என்பதற்கான ஆவணங்கள் எவையும் சமர்ப்பிக்கப்படவில்லை.

வாடிக்கையாளர்களை எச்சரிக்கையூட்டும் வகையில் முகநூலில் பதிவு இடப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...