இந்த வருடத்தில் வெளிநாடுகளில் யாருடைய படம் அதிகம் வசூல் செய்தது- வெளிநாட்டு வசூல் நாயகன் யார்?

Share this post:

vasool

தமிழ் சினிமா அரையாண்டைக் கடந்துவிட்டது. இந்த 6 மாதங்களில் மட்டும் நூறு படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் வெளிநாட்டில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியல் இது.

இதில் விஜய்யின் ‘தெறி’, சூர்யாவின் ’24’ ஆகிய படங்கள் அதிகம் வசூலைக் குவித்து முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.

இதுதவிர ‘இறுதிச் சுற்று’, ‘அரண்மனை 2’, ‘ரஜினி முருகன்’ படங்களுக்கும் வெளிநாட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. எந்தப் படம் எவ்வளவு வசூல் செய்தது? என்று பார்ப்போம்.

வெளிநாடுகளில் 580 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான ‘தெறி’ 45 கோடிகளை வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது. 600 க்கும் அதிகமான திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் வெளியானது ’24’. இந்தப் படம் 31 கோடிகளை வசூல் செய்து 2 வது இடத்தைப் பிடித்துள்ளது.

290 திரையரங்குகளில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘ரஜினிமுருகன்’ 13 கோடிகளுடன் 3 வது இடத்தையும், 130 திரையரங்குகளில் வெளியான ‘அரண்மனை’ 9.5 கோடிகளுடன் 4 வது இடத்தையும் பிடித்துள்ளது.

200 க்கு அதிகமான திரையரங்குகளில் வெளியான ‘இது நம்ம ஆளு’ 4.6 கோடிகளை வசூல் செய்தது. இதன் மூலம் சிம்பு இந்தப் பட்டியலில் 5 வது இடத்தைப் பிடித்திருக்கிறார். 3.8 கோடிகளை வசூலித்து மாதவன்-ரித்திகா சிங்கின் ‘இறுதிச்சுற்று’ 6 வது இடத்தில் உள்ளது.

ரூ 4 கோடி வசூலுடன் ஜெயம் ரவியின் ‘மிருதன்’ 7 வது இடத்திலும், விஜய் சேதுபதியின் ‘காதலும் கடந்து போகும்’ 3.2 கோடிகளுடன் 8 வது இடத்திலும் இருக்கிறது. 2.1 கோடிகளுடன் ‘இறைவி’ 9 வது இடத்திலும், 2 கோடிகளுடன் ‘சேதுபதி’ கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.

Share This:
Loading...

Recent Posts

Loading...