கள்ள காதலை எதிர்த்த தந்தையை கள்ளக்காதலனுடன் சேர்ந்து குத்திக் கொன்ற பெண் – இருவருக்கும் மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி

Share this post:

neethimanarm .

கள்ள காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை கள்ள காதலன் இணைந்து கத்தியால் குத்தி கொலை செய்த பெண்ணுக்கு ஒருவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பெண்ணின் கள்ள காதலனுக்கும் மேல் நீதிமன்ற நீதிபதி சுமுது பிரேமச்சந்திர மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

நுவரெலியா ராகம மெவத்தகம பிரதேசத்தை சேர்ந்த டப்ளியூ.எம். டியோ குமாரி மற்றும் அவரது கள்ள காதலனான பீ.எல்.அசோக லால் பத்திரன ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பளித்து விட்டு பேசிய நீதிபதி பிரேச்சந்திர, கொலை செய்தமை தொடர்பில் குற்றவாளியான பெண்ணுக்கும் நபருக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...