ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சுவாதி வழக்கில் திருப்பம்! -புதிய சிசிடிவி காட்சிகளால் கொலையாளி யார் என்பது உறுதியானது..!

Share this post:

sqaa

சுவாதி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக புதிதாக, கொலையாளி பற்றிய ஒரு வீடியோ ஆதாரம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. கொலையாளி யார் என்பதை அந்த வீடியோ உறுதிப்படுத்திவிட்டது. சுவாதி கொலை வழக்கில் போலீசுக்கு கிடைத்த ஒரே ஆதாரம் சிசிடிவி காமிரா உருவப்படம் மட்டும்தான். நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் உள்ளே கொலையாளி நுழைவதற்கு சற்று முன்பாக சாலையில் நடந்து சென்ற காட்சிதான் கிடைத்தது.

கொலையாளி முதுகில் பை தொங்கவிட்டிருந்தான் என நேரில் பார்த்த சாட்சிகள் கூறியதால், பை அணிந்து நடந்து சென்ற அந்த நபர்தான் கொலையாளியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரை தேடி வந்தனர்.

புதிய காட்சி இந்நிலையில், அவன்தான் கொலையாளி என்பது புதிதாக கிடைத்துள்ள சிசிடிவி காமிரா காட்சி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

17 நிமிடங்கள் சுவாதி கொலை செய்யப்பட்ட கடந்த 24ம் தேதி அன்று, காலை 6.30 மணியில் இருந்து 6.47 மணி வரை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தினுள் கொலையாளி இருந்துள்ளான்.

ஓடுகிறான் சரியாக 6.32 மணிக்கு ரெயில் நிலையத்தில் கொலையாளி நுழைகிறான். இந்த காட்சி அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. பின்னர் சுவாதியை கொலை செய்துவிட்டு 2வது தண்டவாளத்தில் இருந்து குதித்து தண்டவாளம் வழியாக ஓடி முதல் நடைமேடையில் கொலையாளி ஏறி உள்ளான். பின்னர் முதல் நடைமேடையில் அவன் வேகமாக தப்பி ஓடுகிறான்.

வணிக நிறுவனம் இடது கையில் அரிவாளுடன் வலது கையை வேகமாக வீசிக் கொண்டு அவன் தப்பி ஓடும் காட்சிகள் ரயில் நிலையம் வெளியே உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த, கேமராவில் பதிவாகி உள்ளன.

பயம் அப்போது எதிர் திசையில் வாலிபர் ஒருவர் வருகிறார். எதிரில் ஒருவன் அரிவாளுடன் ஓடுவதை பார்த்ததும், பயந்துபோய் அவரை விட்டு விலகி நிற்கிறார்.

ஒரே ஆள் இந்த காட்சியில் ஓடும் நபரும், ரயில் நிலையம் நுழையும் முன்பு ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான நபரும் ஒரே ஆள். எனவே கொலையாளி அவன்தான் என்பது உறுதியாகிவிட்டது.
நெருங்குகிறது காவல்துறை இதுவரை யூகத்தின் பேரில் அந்த நபரை தேடிய போலீசார் இப்போது முழு வீச்சில் தேட ஆயத்தமாகிவிட்டனர். விரைவில் குற்றவாளியை பிடிப்போம் என்கிறது காவல்துறை.

Share This:
Loading...

Related Posts

Loading...