மக்களை உலுக்கும் பேஸ்புக்கில் வெளியான ஆபாசப்படத்தால் தற்கொலை செய்துகொண்ட வினுப்பிரியாவின் மரணம்: மாறுமா மக்களின் சிந்தனை?

Share this post:

aaaa

பேஸ்புக்கில் தனது படங்கள் விரும்பத்தகாத வகையில் வெளியிடப்பட்டதையடுத்து சேலத்தை சேர்ந்த 21 வயது வேதியியல் பட்டதாரி தற்கொலை செய்துக் கொண்டார். பெற்றோர்களே தன்னை நம்பாத போது இந்த உலகில் வாழ்ந்து என்ன பயன் என்று தற்கொலை கடிதத்தில் வினுபிரியா கூறியிருப்பது பல்வேறு கேள்விகளை நம் முன் வைக்கிறது.

பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் போதெல்லாம் பாதிக்கப்படும் பெண்ணையே குற்றம் சொல்லும் நிலையே தொடர்கிறது. அத்தகைய கொடூரமான சமூகத்தில் தான் வாழ்ந்து வருகிறோம் என்பதை வினுபிரியாவின் தற்கொலை மீண்டும் நிரூபித்துள்ளது.

வினிபிரியாவுக்கு மட்டும் இத்தகைய கொடூர முடிவு நேரவில்லை. நம் அன்றாடம் சந்திக்கும் பெண்கள் பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானாலும் குடும்பத்தினர் தன்னை நம்ப மாட்டார்கள் என்பதால் வீட்டில் சொல்ல தயங்கும் நிலையே நீடிக்கிறது.

ஒழுக்கம் என்ற பெயரில் பெண்ணின் பாலியல் விருப்பங்களையும் திருமண விருப்பங்களையும் தீர்மானிக்கும் கட்டுப்பாடுகள் ஆணாதிக்க சமூகத்தில் விதிக்கப்படுகின்றன. இதனாலேயே பெண்ணுக்கு உயிரை விட மானமே பெரியது என்று காலம் காலமாக கற்பிக்கப்படுவதும் இதுபோன்ற துயர முடிவுக்கு ஒரு காரணியாக அமைந்துவிடுவதாகக் சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

வினுபிரியாவின் விவகாரத்தில் தவறான புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருப்பது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் கொடுத்தும் அவர்கள் உடனே நடவடிக்கை எடுக்கவில்லை என்பதோடு, அந்த புகைப்படங்களை வினுபிரியா தான் கொடுத்திருப்பதாக காவல்துறையினர் வினுபிரியாவின் பெற்றோரிடம் விசாரணை செய்யாமல் தவறான தகவலைக் கூறியிருப்பதும் தெரியவந்துள்ளது. இது போன்ற புகார்கள் மீது காவல்துறையினர் உடனடி நடவடிக்கைகள் எடுப்பதில்லை என்று இணைய செயற்பாட்டாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றம் சொல்லும் போக்கிலிருந்து விடுபட்டு, பெண்களின் குரலையும், உரிமைகளையும் மதிப்பதோடு, அவர்களுக்கான ஆதரவு குரல்களையும் கொடுக்க அனைவரும் முன் வர வேண்டும்

Share This:
Loading...

Related Posts

Loading...