வெளிநாட்டு வியாபாரத்தில் அஜீத் விக்ரமை பின்னுக்குத் தள்ளிய சிவகார்த்திகேயன்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Share this post:

ajith

படங்களின் வெளிநாட்டு விற்பனை உரிமையில் அஜீத்தை விட சிவகார்த்திகேயனே முன்னணியில் இருப்பதாக, ஐங்கரன் நிறுவனம் அறிவித்துள்ளது.

திரைப்படத் துறையில் 25 ஆண்டுகளாக இருக்கும் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் சமீபத்தில், முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளிநாடுகளில் எவ்வளவு விலை போகின்றன என்ற விவரத்தை வெளியிட்டிருக்கிறது.

இதில் 30 கோடிகளுடன் ரஜினி முதலிடத்தையும் 22 கோடிகளுடன் விஜய் 2 வது இடத்தையும் கைப்பற்றியுள்ளனர். சூர்யா 20 கோடிகளுடன் 3 வது இடத்தையும், கமல் 15 கோடிகளுடன் 4 வது இடத்திலும் இருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் 10 கோடிகளுடன் 5 வது இடத்திலும், அஜீத் 8 கோடிகளுடன் 6 வது இடத்திலும் இருக்கிறார். 7 கோடிகளுடன் விக்ரம் இந்தப் பட்டியலில் 7 வது இடத்தையும் 6 கோடிகளுடன் சிம்பு கடைசி இடத்திலும் இருக்கிறார்.

விஜய்க்கு போட்டியாக பார்க்கப்படும் அஜீத் இந்தப் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜீத், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் வெளிநாட்டு வியாபாரத்தை விட, சிவகார்த்திகேயனின் வெளிநாட்டு உரிமை அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இதனை வைத்து அஜீத்-விஜய் ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...