பெண் ஒருவர் வாங்கிய சாப்பாட்டு பொட்டலத்தில் பல்லி – கடையை இழுத்து மூடிய பரிசோதகர்கள்

Share this post:

palli

உணவகம் ஒன்றில் பெண் ஒருவர் வாங்கிய சாப்பாடு பார்சலுக்குள் இறந்த நிலையில் பல்லி இருந்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிலேயே இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளதுடன், அப்பெண் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு அறிவித்ததையடுத்து பொலிஸாருடன் குறித்த உணவகத்துக்கு விரைந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அத்தோடு, குறித்த உணவகமும் அதிகாரிகளினால் மூடப்பட்டுள்ளது.

குறித்த உணவு விடுதி உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...