காதலில் ஒரு தடவை தோற்று தான் பாருங்களேன்!

Share this post:

love

இந்த உலகில் அப்பா அம்மா இறந்தால் கூட கண்ணீர் விடுவார்கள், ஆனால் காதலியோ காதலனோ இறந்தால் தான் உயிரையே விடுவார்கள் என்ற வசனங்கள் எல்லாம், கேட்பதற்கும் பேசுவதற்கும் வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்.

ஆனால், நிஜ வாழ்க்கையில் சற்றும் எடுபடாத ஒன்று, சிலர் காதல் தோல்வி அடைந்துவிட்டால், உலகமே இருண்டுவிட்டது போன்று எண்ணி ஒரு மூலையில் உட்கார்ந்து விடுவார்கள்.

ஆனால், எத்தனை பேருக்கு தெரியும் காதல் தோல்விக்குள்ளும் ஒளிமயமான வாழ்க்கை மறைந்து இருக்கிறது என்று.

வாழ்க்கை என்பது நிலையானது அல்ல, எல்லாமே கடந்து போவது தான் என்பதை அழுத்தமாக உணர்த்தும் செயல் காதல் தோல்வி.

எதற்காகவும் கண்ணீர் சிந்தி பயனில்லை, நமது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டியது மட்டுமே நமது பணி.

காதல் தோல்வி என்பது வாழ்க்கையின் வலிமையை தரவல்லது. மனதளவில் முதலில் பாதிப்படைந்தாலும், பின்னாளில் இதே வலிமையாக அமைகிறது.

மேலும் வாய்ப்புகள் இருக்கிறது என உணர்த்துவதும் காதலே. முதல் தோல்வி முற்றிலும் தோல்வி அல்ல. அடுத்தடுத்த முயற்சிகளில் வெற்றி பெறலாம் எனும் பாடத்தை கற்பிப்பது காதல் தோல்வி தான்.

வாழ்க்கையில் விளையாட்டாக இருக்கும் ஆண்களை முதிர்ச்சி அடைய வைப்பது சில காதல் தோல்விகள் தான். இவர்களுக்கு வாழ்க்கை என்றால் என்ன, வாழ்க்கையின் அடுத்தக் கட்டம் என்ன என்று உணர்த்துவதும் சில காதல் தோல்விகள் தான்.

நமது வாழ்க்கையில் தானாக நடக்கும் அனைத்துமே நன்மைக்கே என்பதை உணர்த்துவது காதல் தோல்வி தான்.

நூற்றில் பத்து பேர் தங்களுக்கான சிறந்த துணையை இழப்பது உண்டு. ஆனால், மற்ற 90 பேர் காதல் தோல்விக்கு பிறகு தான் தங்களுக்கு ஏற்ற உண்மையான துணை யாரென அறிகிறார்கள், இதுவே நிதர்சனமான உண்மை.

Share This:
Loading...

Recent Posts

Loading...