கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள மற்றுமொரு அட்டகாசமான வசதி..!

Share this post:

goo2

இணையத் தேடல்களில் தன்னிகரற்ற சேவையினை வழங்கி வரும் ஒரே ஒரு தேடுபொறியாக கூகுள் விளங்குகின்றது.

இத்தளத்தின் ஊடாக சொற்களைப் பயன்படுத்தி மட்டுமன்றி புகைப்படங்கள், குரல் வழி கட்டளைகள் ஊடாகவும் தேடல்களை மேற்கொள்ள முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.

தற்போது இவற்றையெல்லாம் தாண்டி மற்றுமொரு புதிய வசதியினை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

அதாவது பாடல் வரிகளைத் தேடித் தரக்கூடிய LyricFind எனும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

ஒரு பாடலின் முழுமையான வரிகளும் தேவை எனின் அப்பாடலின் ஆரம்ப அடிகளை தட்டச்சு செய்து அதனைத் தொடர்ந்து Lyric என்பதனையும் தட்டச்சு செய்தாலே போதும் உடனடியாக பாடலின் அனைத்து வரிகளையும் முதற் பக்கத்திலேயே காண்பிக்கும்.

இவ்வசதி தற்போது ஆங்கில பாடல்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தவிர கூகுள் தளத்தின் அமெரிக்க பதிப்பில் மட்டும் இவ்வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே ஏனைய நாட்டவர்கள் www.google.com என்ற இணைய முகவரியை பயன்படுத்தி இவ்வசதியினை பெற்றுக்கொள்ள முடியும்.

மாறாக www.google.in, www.google.lk போன்ற முகவரிகளைப் பயன்படுத்தினால் இவ் வசதியினை பெற்றுக்கொள்ள முடியாது.

goo

Share This:
Loading...

Recent Posts

Loading...