மாணவன் ஒருவருக்கு ஆண் உறுப்பைப் பிடித்து தண்டனை வழங்கிய அதிபர் கைது! யாழில் நடந்த சம்பவம்..!

Share this post:

aan

பாடசாலை மாணவன் ஒருவரின் மர்ம உறுப்பினை பிடித்து தண்டணை வழங்கிய அதிபர் ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

யாழ். பாசையூர் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையில் 8ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு தண்டனை வழங்குவதற்காக இவ்வாறு மர்ம உறுப்பை பிடித்து அதிபர் தண்டனை வழங்கியுள்ளார்.

எனினும், இந்த சம்பவத்தினை அவதானித்த ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய பாடசாலை அதிபரை யாழ். பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

இதனிடையே, சந்தேக நபரை யாழ்.நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...