சிறுமி ஒருவரை கூட்டாகச் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த 3 சகோதரர்கள்..!

Share this post:

sirumi

இந்தியாவில் மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் 13 வயது சிறுமியை மூன்று சகோதரர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் மாவட்டத்தில் உள்ள கணேஷ்பாத் என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த சஞ்சய் என்பவன் அவனது சகோதரர்கள் இருவருடன் இணைந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

பின்னர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பதை உறுதிச்செய்ய வைத்தியசாலையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனையில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குற்றம் சுமத்தப்பட்டவர்களான 12 மற்றும் 17 வயதுடைய இரு சகோதரர்களை கைது செய்துள்ள பொலிஸார் , அவர்களின் அண்ணன் சஞ்சய்(21) என்பவனை தேடி வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...