குடித்துவிட்டு போதையில் கல்லூரி மாணவி செய்த அட்டகாசம் குழம்பித் தவித்த பொலிஸார் (Video)

Share this post:

manavi

குடிபோதையில் காவல் நிலையத்தில் ரகளை செய்த கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார். மும்பையைச் சேர்ந்தவர் கவுரி பிதே கல்லூரியில் படித்து வருகிறார்.

இவர் கடந்த 16-ம் தேதி தனது நண்பருடன் காரில் செல்லும் போது நடைபாதையில் மோதியதால் அவர் நண்பருடன் கைது செய்யப்பட்டார். அப்போது கவுரி போதையில் இருந்து உள்ளார்.

கவுரியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போது அங்கு அவர் ரகளையில் ஈடுபட்டு உள்ளார். காவல் அதிகாரிகளை அடித்து உதைத்து உள்ளார்.

அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து உள்ளார். அவருடன் வந்த நண்பர் கவுரியை கட்டுபடுத்த முயன்று உள்ளார். ஆனால் அவரால் முடியவில்லை.

இந்த பெண்ணின் ரகளை காவல் நிலையத்தில் 10 நிமிடம் நடந்தது. பின்னர் கவுரி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவபரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவர்மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்பு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Share This:
Loading...

Related Posts

Loading...