பெண் ஒருவரின் போட்டோவை ஆபாசமாக எடிட் செய்து ஃபேஸ்புக்கில் ஏற்றிய விஷமிகள்… அவமானத்தில் இளம்பெண் தற்கொலை- வீடியோ

Share this post:

kola

ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்ட போட்டோவை ஃபேஸ்புக்கில் மர்ம நபர் வெளியிட்டதால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையைச் சேர்ந்தவர் வினுப்பிரியா. இவரது ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள படத்தை எடுத்து ஆபசமாக சித்தரித்து அதனை அவரது பக்கத்திலேயே வெளியிட்டான் மர்மநபர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வினுப்பிரியா, இது குறித்து வீட்டில் தெரிவிக்கவே, இது தொடர்பாக மகுடஞ்சாவடி காவல் நிலையம் மற்றும் சங்ககிரி டிஎஸ்பி அலுவலகத்தில் வினுப்பிரியாவின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வந்தனர். புகார் கொடுத்து ஒரு வாரம் கடந்த நிலையில், அந்த மர்ம நபர் மீண்டும் வினுப்பிரியா படத்தை மார்பிங் செய்து மற்றொரு ஆபாசப் படத்தை பதிவேற்றியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வினுப்பிரியா, தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த வாரம் புகார் கொடுத்த போதோ போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரு உயிரை இழந்திருக்க தேவையில்லை என்று வினுப்பிரியாவின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Share This:
Loading...

Recent Posts

Loading...