யாழில் அரங்கேறும் தாக்குதல்கள் – இலங்கை போக்குவரத்து சபை பஸ் மீது தாக்குதல் ஒருவர் படுகாயம்..!

Share this post:

ass

காரைநகர் ஊடாக வவுனியாவிற்கு சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான சாரதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.15 ற்கு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தில் வரணி கொடிகாமத்தினைச் சேர்ந்த கதிர்காமகுமார் குலசிங்கம் (55)என்ற நபரே காயமடைந்துள்ளார்.

அதேநேரம், யாழ். சண்டிலிப்பாய் பகுதியிலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...