நித்திரையிலிருந்து எழும்ப மறுத்த மகளை சரமாரியாகத் தாக்கிய தாய்- இலங்கையில் நடந்த விசித்திர சம்பவம்..!

Share this post:

adi
.
நித்திரையிலிருந்து எழும்ப மறுத்த மகளை சரமாரியாகத் தாக்கிய தாய்- இலங்கையில் நடந்த விசித்திர சம்பவம்..!

மகள் காலதாமதமாக நித்திரையிலிருந்து எழும்பியதால் மகளொருவரை தாக்கிய தாயார் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை, ரஜவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

11 வயதான தனது மகளை குறித்த காலை 5 மணிக்கு எழுப்பி வந்துள்ளார் குறித்த தாய்.

குறித்த தாய் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணியாற்றி வருவதாகவும் , தனது தாயை கவனித்துக்கொள்வதற்காக மகளை அதிகாலையிலேயே எழுப்பி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகள் எழும்ப மறுத்தமையால் தும்புத் தடியால் தாக்கியுள்ளதுடன், புத்தகங்களையும் எரித்துள்ளார்.

பின்னர் மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மகள் பின்னர் தாயுடன் செல்ல மறுத்தமையால் பாட்டியிடம் இருப்பதற்கு நீதவான் அனுமதியளித்துள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...