காதலியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த காதலன் – கிழக்கில் சோகம்..!

Share this post:

killed

அம்பாறை, கொண்டுவட்டுவான பிரதேசத்தில் இளைஞர் ஒருவர், தனது காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவர் விஷம் அருந்தியுள்ளதுடன், தற்போது அவர் அம்பாறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர், உகனை, சேனகம பிரதேசத்தை சேர்ந்த யுவதி என தெரிவந்துள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர், தனியார் பேரூந்தொன்றின் நடத்துடனர் என காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த யுவதியுடன் முச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருந்த போதே, சந்தேக நபர் இந்த கொலையை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட யுவதியின் சடலம் இன்று காலை கொண்டுவட்டுவான பிரதேசத்தில் உள்ள பாதை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...