நிதி நெருக்கடி காரணமாக முக்கிய விமான சேவைகளை இடைநிறுத்த தீர்மானம்..!

Share this post:

vim

பாரிஸ் மற்றும் பிராங்பேர்ட் (Frankfurt) ஆகியவற்றுக்கான தனது விமான சேவையை, இவ் வருடத்தின் குளிர்காலத்துடன் (winter) இடைநிறுத்த ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பிராங்பேர்ட் மற்றும் கொழும்புக்கு இடையிலான இறுதி விமான சேவை (UL 553/554) ஒக்டோபர் 30ஆம் திகதியும், பாரிஸில் இருந்து கொழும்புக்கான இறுதி விமான சேவை (UL 563/564) நவம்பர் 6ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.

நாளாந்தம் ஏற்படும் நிதி இழப்புக் காரணமாக குறித்த விமான சேவைக்கு நிதி வழங்குவதை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, ஶ்ரீ லங்கள் எயார் லைன்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...