ஆண்களே! உங்க அழகை அதிகரிக்க வேண்டுமா? இதோ சில அட்டகாசமான டிப்ஸ்…

Share this post:

be
அழகு என்பது பெண்களுக்கு மட்டுமில்லை ஆண்களுக்கும் உண்டு. பெண்கள் மட்டும் தான் அழகைப் பராமரிக்க முகத்திற்கு மாஸ்க், ஃபேஷியல் என்று செய்ய வேண்டும் என்பதில்லை, ஆண்களும் இவற்றை மேற்கொள்ளலாம். பல ஆண்களுக்கு அழகைப் பராமரிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. ஆனால் என்ன, ஆண்களுக்கு நேரம் கிடைப்பதில்லை.

இருப்பினும் விடுமுறை நாட்களிலும், இரவில் படுக்கும் முன்னும், ஆண்கள் சில ஃபேஷியல்களை, அதிலும் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் ஃபேஷியல்களை செய்து வந்தால், அழகை அதிகரிப்பதோடு, தங்களின் இளமைத் தோற்றத்தையும் தக்க வைக்கலாம். சரி, இப்போது ஆண்களின் அழகை அதிகரிக்க உதவும் சில ஃபேஷியல்களைப் பார்ப்போமா!!!

தயிர் ஃபேஸ் பேக்
அனைத்து வீடுகளிலும் தயிர் நிச்சயமாக இருக்கும். அந்த தயிரைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் முன், மசாஜ் செய்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறுவதோடு, சருமம் ஈரப்பசையுடன் பொலிவோடும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

எலுமிச்சை சாஸ
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு, வெயில் காலத்தில் எரிச்சல் அதிகம் இருக்கும். ஆகவே எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த சருமத்தை எலுமிச்சை சாறு கொண்டு பராமரிக்க வேண்டும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், சிறிது ஆலிவ் ஆயில் மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனால் எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்படுவதோடு, சருமத்தின் நிறமும் அதிகரிக்கும்.

க்ளே மாஸ்க்
க்ளே மாஸ்க்கை பெண்கள் மட்டும் தான் போட வேண்டும் என்பதில்லை, ஆண்களும் போடலாம். அதற்கு கற்றாழை ஜெல்லில், க்ளே, தேன் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத் துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு இருக்கும்.

ஸ்ட்ராபெர்ரி மாஸ்க்
ஸ்ட்ராபெர்ரி தற்போது அதிகம் கிடைப்பதால், அதனை வாங்கி சாப்பிடுவதுடன், சில பழங்களை மசித்து, அதில் தேன் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போடுங்கள். ஏனெனில் ஸ்ட்ராபெர்ரி சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் சிறந்தது.

ஓட்ஸ்
ஃபேஷியல் பேக் வறட்சியான சருமம் என்றால், ஓட்ஸ் தான் மிகவும் சிறப்பான பொருள். அதற்கு ஓட்ஸை வெதுவெதுப்பான நீர் சேர்த்து அரைத்து, அதில் 1 முட்டையின் மஞ்சள் கரு, தேன் மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் பளிச்சென்று இருக்கும்.

குறிப்பு
ஆண்களே! சருமத்திற்கு மாஸ்க், ஃபேஷியல் போன்றவற்றை செய்யும் முன், ஷேவிங் செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவை தாடியில் ஓட்டிக் கொண்டு, பின் அதனை போக்குவதில் சிரமம் ஏற்படும்.

Share This:
Loading...

Recent Posts

Loading...