ஆண்களை உசுப்பேற்ற பெண்கள் செய்யும் சில விஷயங்கள்..!

Share this post:

03-1462270459-5sevenwayswomencleverlytemptaman

காதல் என்பது தனிமனித உரிமை. நீ என்னை கட்டாயம் காதலிக்க வேண்டும் என யாரும் நிர்பந்தம் செய்ய முடியாது. மேலும், இது சட்டவிரோதமான செயலும் கூட. ஆனால், சிலர் பழகும் விதத்தை கண்டால் நமக்கே அவர் நம்மை காதலிக்கிறார் என்ற எண்ணம் தானாக மனதில் பிறந்துவிடும்.

ஒவ்வொரு உறவிற்கும் ஒவ்வொரு எல்லை இருக்கிறது. எல்லைகள் அற்ற உறவு என்பது காதலும், நட்பும் தான். ஒரு வயதுக்கு மேல், பெற்றோரே கூட பிள்ளைகளிடம் ஒரு அளவிற்கு மேல் நெருக்கம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், காதலும், நட்பும் தான் இந்த எல்லையில்லாத உறவுகள்.

மேலும் இங்கு தான் சித்துவிளையாட்டும் இருக்கிறது. மணக்க… மணக்க பழகிவிட்டு, காதல் என்று போய் நின்றால், ச்சேச்சே.. நான் அப்படி ஒரு எண்ணத்துல பழகல, சாரி! என்று கூறினால் ஆண்களுக்கு கொஞ்சம் கடுப்பாகதான் செய்யும்.

இந்த வகையில், சில வசனங்கள் கேட்கும் போது, “நம்மள உசுப்பேத்தவே இப்படி பேசுறாங்களா…” என தோன்றும். அந்த வகையான வசனங்கள் பற்றிஇனிப் பார்க்கலாம்….

நண்பன்
தோள்களில் சாய்ந்து குமுறி, குமுறி அழுது, போகும் இடமெல்லாம் நானும், வருவேன், போ, போ என வந்துவிட்டு, “ஐம் யுவர் குட் ஃப்ரென்ட் யு க்நோ” என கூறுவது.

நிச்சயம்
எனக்கு நிச்சயம் பண்ணிட்டாங்க, நான் உன்ன ஒரு லவ்வர் ஃபீல்’ல பார்க்கவும் இல்ல, அப்படி ஒரு எண்ணத்துல பழகவும் இல்ல என கூறுதல்.

கேசுவலாக
நான் உன்கிட்ட என்ன பத்தி பேசுனது, நம்மள பத்தி பேசுனது எல்லாமே கேசுவலா பேசுனது. அத நீ தப்பா நெனச்சுக்கிட்டா நான் என்ன பண்ண முடியும்.

அக்கறை
ஒரு அக்கறைல தான், நான் உன் வாழ்க்கை, உன் வேலை பத்தி அதிகமா அக்கறை எடுத்துக்கிட்டேன், மத்தபடி தப்பா வேற எதுவும் இல்ல.

சாரி
விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்சி போல தான் பல பெண்கள் கடுப்படிக்க செய்கிறார்கள். “நாம ஏன் எப்பவுமே ஃப்ரெண்ட்ஸா இருக்க கூடாது.”

கனவு
எனக்குன்னு சில கனவுகள் இருக்கு. அத என்னால இழக்க முடியாது. அதுமட்டுமில்லாம என்னோட வுட்பீ பத்தி நிறைய கனவுகள் இருக்கு, ஆசைகள் இருக்கு. என்னால இப்ப வேற எதுலையும் கான்சென்றேட் பண்ண முடியாது.

Share This:
Loading...

Recent Posts

Loading...