பேட் பாய்ஸ் மீது பெண்கள் அதிக ஈர்ப்புக் கொள்வது ஏன்? பெண்கள் கூறும் காரணங்கள்!

Share this post:

13-1463129982-6girlsrevealwhytheychoosebadboysovertheniceones

இப்போதுள்ள சினிமாத்தனமான வாழ்க்கையில் திரையில் ஓடும் ரீல் படத்தை ரியல் வாழ்க்கையில் ஒட்டிப் பார்க்க வேண்டும் என்று தான் பலரும் ஆசைப்படுகின்றனர். இதில் என்ன தவறு என்கிறீர்களா? அளவுக்கு மீறி மாயை உலகினுள் காலடி எடுத்து வைத்துவிட்டால். மெய் உலகினுள் மீண்டும் வருவது மிகவும் கடினம்.

இப்படி தான் சில பெண்கள் 90-களில் இருந்தே பேட் பாய்ஸ் தான் பெஸ்ட். அம்பி எல்லாம் வேஸ்ட் என இருக்கிறார்கள். இவர்களின் விகிதம் மிகவும் குறைவு தான். ஆனால், சமூகத்தில் இவர்கள் தான் பெரும்பாலும் இருப்பது போன்ற பிம்பம் விளங்குகிறது. இதற்கு காரணம் நான் லவ் பண்றேன், லவ் பண்றேன் என இவர்கள் கத்திக் கொண்டே காதலிப்பது தான்.

சரி அப்படி என்ன தான் இருக்குன்னு பேட் பாய்ஸ் தான் லவ் பண்ண பெஸ்ட் என்கிறார்கள் என்ற கேள்வியை வைத்தால், அதற்கு சில அசாத்திய காரணங்களும் கூறுகின்றனர்…

காரணம் #1
பேட் பாய்ஸ் மிக வலிமையாகவும், உறுதியாகவும் இருப்பது பெண்களுக்கு பிடித்துள்ளதாம்.

காரணம் #2
வலிமையாக, உறுதியாக இருப்பதால், அவர்கள் தங்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வார்கள் என நம்புகிறார்கள்.

காரணம் #3
இவர்கள் தான் மெய்யாலுமே ஆம்பள என்கின்றனர். மேலும், இவர்கள் ஃப்ளர்ட் செய்யும் ஆண்களை போல பொய்கள் கூறுவதில்லை. பெண்களை அடிடா அவள, ஒதடா அவள என பேசுவதில்லை என்கின்றனர்.

காரணம் #4
பேட் பாய்ஸ் அவர்கள் மீது அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். அது பிடித்தமான குணமாக இருக்கிறது.

காரணம் #5
பேட் பாய்ஸ்-இடம் போராடும் குணம் அதிகமாம். எவ்வளவு தூரம் வாழ்க்கை வாட்டி வதைத்தாலும் அசால்ட்டாக இருப்பார்களாம்.

காரணம் #6

பேட் பாய்ஸ் பொய் கூற மாட்டார்கள். எங்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இல்லாததை பேசமாட்டார்கள் என்கின்றனர்.

கருத்து!

ஆகமொத்தம் பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேணுமா? மேலும், பல இடங்களில் உடல் திறனுடன் இருக்கும் ஆண்களை தான் பேட் பாய்ஸ் என்ற கண்ணோட்டம் கொண்டு இவர்கள் கூறுகின்றனர். உண்மையாவே பேட் பாய்ஸ் ரொம்ப டெரர் என்பது இவர்களுக்கு தெரியாதோ..!?!??

Share This:
Loading...

Recent Posts

Loading...