நீங்கள் நன்றாக வாகனம் ஓட்டத் தெரிந்தவரா? ஆனாலும் இந்த வீதிகளில் வாகனம் ஓட்ட கொஞ்சம் யோசிப்பீங்க – உலகின் மிகவும் அபாயகரமான சாலைகள்! (Photos)

Share this post:

maxresdefault

நீண்ட சாலையில் வாகனம் ஒட்டி செல்வது என்பது பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்தமான செயல். அதிலும் நண்பர்கள் அல்லது பிடித்தமான நபர்களுடன் செல்வது என்பது மிக அழகான தருணமாக அமையும். ஆனால், உலகில் எல்லா சாலைகளும் இது போன்ற இனிமையான பயணத்தை தருவதில்லை.

சில சாலைகள் மிகவும் அபாயகரமாகவும் அமைகிறது. சில சாலைகள் கடல் மட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடி தூரம் உயர்ந்து செல்கிறது. சிலவன பார்க்க நேர் கோடு போல அமைதியாக இருப்பினும், எதிர்பாராத திருப்பங்கள் கொண்டு உயிரை பழிவாங்கிவிடுகிறது. இந்த வகையில் உலகின் மிகவும் அபாயகரமான சாலைகள் குறித்து இனி காணலாம்…

ஃபுர்கா பாஸ் (சுவிச்சர்லாந்து)
1964-ம் ஆண்டு வெளிவந்த ஜேம்ஸ்பாண்ட் கோல்ட்ஃபிங்கர் படத்தில் இந்த சாலைககளை நீங்கள் பார்த்திருக்கலாம். சுவிஸ் -ன் ஆல்ப்ஸ் மலையில் ஏறத்தாழ 7,969 அடி நீளம் கொண்டுள்ளது இந்த சாலைகள். ஐரோப்பாவின் நீளமான சாலைகளில் இதுவும் ஒன்று.
28-1464425783-1furkapass

யூ.ஈஸ் வழித்தடம் 431 அலபாமா
முழு நீளமாக நேர் கோடு போன்று அமைந்திருக்கிறது இந்த சாலை. அதிவேகமாக செல்வதால் இங்கு விபத்துக்கள் அதிகமாக நடக்கின்றன. கண்ணுக்கு தெரியாத இடங்களில் திடீர் திருப்பங்கள் கொண்டிருப்பதால் இங்கு விபத்துக்கள் அதிகமாக நிகழ்கின்றது. ஐநா இதை மிகவும் அபாயமான சாலை என அறிவித்துள்ளது.
28-1464425804-2u-s-route431alabama

கோல் டு சவ்ஸி, பிரான்ஸ்
வளைவு நெளிவான மலை பாதை கொண்டது இந்த சாலை. ஹேர்பின் பெண்டுகள் என்பது இதற்கு தான் 100% பொருந்தும். கடல் மட்டத்தில் இருந்து 1,533 மேலே உயர்ந்து செல்கிறது இந்த அபாயகரமான சாலை.
28-1464425826-3colduchaussyfrance

ஸ்கிப்பர்ஸ் கென்யான் சாலை (Skippers Canyon Road – New Zealand)
மவுண்ட் ஆரம் க்யூன்ஸ்டவுன்-ல் இருந்து 25 நிமிடங்கள் பயணிக்கும் தூரம் இந்த சாலை அமைந்துள்ளது. பியர் பேக்டர் அளவில் 7/10 என கணக்கிடப்பட்டுள்ளது.
28-1464425832-4skipperscanyonroadnewzealand

ஹல்சேமா நெடுஞ்சாலை (பிலிப்பைன்ஸ்)
பிலிப்பைன்ஸ்-ன் உயரமான நெடுஞ்சாலை ஆகும். இது Baguio to Bontoc நகரங்களை இணைக்கின்றன. வழுவழுப்பான இந்த சாலைகள் சரியான பராமரிப்பு இன்றி இருந்துவருகிறது. இதனால், நிறைய விபத்துக்கள் நடக்கின்றன.
28-1464422698-6halsemahighwayphillippines


லக்சர்-அல்-ஹூர்காட சாலை (எகிப்து)

299 மைல் தூரம் நீர் பாதை கொண்ட இந்த லக்சர்-அல்-ஹூர்காட சாலை லக்சர், ஹூர்காட எனும் இரண்டு சுற்றுலா பயண இடங்களை இணைக்கிறது. உலகின் மோசமான நெடுஞ்சாலைகளில் இதுவும் ஒன்று. இந்த சாலையை கடந்து செல்ல 4.40 மணி நேரம் ஆகும். இந்த பாதைக்கு நடுவில் நிறைய கடத்தல், கொள்ளை, கொலை சம்பவங்கள் நடக்கின்றன. இரவில் இந்த சாலையில் பயணிப்பது மிகவும் அபாயகரமானது.
28-1464425856-8luxor-al-hurghadaroadegypt

பேபர்ட் டி 915, துருக்கி
திரப்ஜொன் மாகாணத்தில் அமைந்துள்ளது இந்த சாலை. மிகவும் சவாலான சாலையும் கூட. கரணம் தப்பினால் மரணம் என்பது போன்ற சாலை இது. கடல் மட்டத்தில் இருந்து 2,035 மீட்டர் உயரம் செல்கிறது இந்த சாலை.
28-1464425864-9bayburtd915turkey

Share This:
Loading...

Recent Posts

Loading...